கோவையில் திறக்கப்படும் பிரம்மாண்ட புரோசோன் மால் (prozone mall)
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என அழைக்கப்படும் கோவை மாநகரில், ‘புரோசோன் மால்’ எனும் பிரம்மாண்ட வர்த்தக வளாகம், ஜூலை 21 ந் தேதி திறக்கப்பட உள்ளது.
சர்வதேச தர பொருட்களை சந்தைப்படுத்தும் நகரங்களில் டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னைக்கு அடுத்தப்படியாக, பெரிய நகரமாக வளர்ந்து வரும் கோவையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, புரூக் பீல்டு மால், பன் மால் என இரண்டு மிகப்பெரிய வர்த்தக மால்கள் திறக்கப்பட்டது.
உலகம் எல்லாம் சுற்றி வந்தவர்களுக்கும், உலகம் தெரியாதவர்களுக்கும் கூட, இனி உலகத் தரம் வாய்ந்த மால் ஒன்றை உள்ளூரிலேயே கண்டுகளித்து கொண்டாடலாம். ஒரே இடத்தில் அவசியமான அத்தனை பொருட்களையும் வாங்கலாம்.
கோவை–சத்தி சாலையில் கட்டப்பட்டுள்ள இந்த மால் திறப்பு விழா, ஜூலை 21 ந்தேதி நடக்கிறது. சர்வதேச அளவில் பெயர் பெற்ற, 5 லட்சம் சதுரடிக்கும் மேல் உருவாக்கிய தென் ஆப்பிரிக்காவில் உள்ள பெண்டால் ஆர்க்கிடெக்ட் இன்டு பிராபர்ட்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து, இந்த மால்– ஐ உருவாக்கியுள்ளது. இன்ட்டு நிறுவனம், இங்கிலாந்தில் 20 உள்ள ஷாப்பிங் சென்டர்களில் 9 சென்டர்களை நிர்வகித்து வருகிறது.
இந்தியாவில் நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் குறிப்பாக மும்பை, அவுரங்காபாத், கோயம்புத்துார், நாக்பூர், இந்துார் மற்றும் ஜெய்ப்பூரில் 20 மில்லியன் சதுரடி நிலப்பரப்பைக் கொண்டுள்ளது.
சிறந்த உள்கட்டமைப்பு
புரோவோக் மற்றும் புரோசோன் நிர்வாக இயக்குனர் நிகில் சதுர்வேதி கூறுகையில், ‘‘ஒரு குடும்பத்துக்கு தேவையான அத்தனை பொருட்களும், ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் என்பது தான் புரோசோன் மந்திரம். அதற்கு ஏற்ப, ஒவ்வொரு பகுதியாக பார்த்து பார்த்து வடிவமைத்துள்ளோம். இதில், அனைத்து வசதிகள் மட்டுமின்றி, அனைத்து சேவைகளும் கிடைக்கும் வகையில் அமைத்துள்ளோம்.
உள்ளூர்வாசிகள் மட்டுமின்றி, வெளியூரிலிருந்து வருவோர், விமான நிலையம், ஊட்டி, கொடைக்கானல், மூணாறு மற்றும் கூர்க் ஆகிய பகுதிகளிலிருந்து வந்து செல்வோருக்கும் இது எளிதாக வந்தடையும் இடமாக உள்ளது. அன்னூர், மேட்டுப்பாளையம், பல்லடம், சேலம், ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி, கோழிக்கோடு போன்ற நகரங்களுக்கும், பொழுதுபோக்கு அம்சங்களாக மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளையும் ஆண்டு முழுவதும் 365 நாட்கள் கவரும். தகவல் தொழில்நுட்ப மையமாக திகழும் கோவையில், சில்லறை விற்பனையகமாக இது அமைந்துள்ளது.
11 ஏக்கரில் பிரம்மாண்ட மால்
சத்தியமங்கலம் ரோட்டில் 11 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள இந்த மாலில், வாடிக்கையாளர்கள் வந்து செல்ல இரண்டு இடங்களில் பிக் அப் பாயிண்ட்டுகள் உள்ளன. கிராண்ட் என்ட்ரன்ஸ் பியாஸா செல்பி பாய்ன்ட் ஒரு இடத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மாலில் மட்டுமே கிரவுண்ட் பிளஸ் ஒன் தளங்களும், பரந்து விரிந்த இடங்களும், மாலின் பல தோற்றங்களையும் காண முடியும்.
பல இடங்களில் எஸ்கலேட்டர், டிராவலட்டர்ஸ், எலிவேட்டர், படிக்கட்டுகள் என 100 சதவீதம் மின்சக்தியுடன் நிறுவப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்கள் ஆண்டு முழுவதும், பல்வேறு கலச்சார நிகழ்வுகளை இங்கு கண்டு கொண்டாடலாம். இயற்கையான காற்றும், சூரிய ஒளியும் வரும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
2500 கார்களை நிறுத்த வசதி
பந்தய பாதை போன்ற வட்டவடிவிலான நடைபாதைகள் இருப்பதால், எங்கும் முடிவில்லாத இட வசதியை வாடிக்கையாளர்கள் அனுபவிக்க முடியும். போதுமான கார்பார்க்கிங் வசதி, ஒரே சமயத்தில் 2500 கார்களை நிறுத்தவும், விரைவாக பார்க்கிங் செய்யவும் வசதிகள் உள்ளன.
பார்க்கிங் இடத்திலிருந்து எளிதாக செல்ல எஸ்கலேட்டர், எலிவேட்டர்கள் இடம் பெற்றுள்ளன. கால் டாக்ஸி, ஆட்டோ ரிக்ஸா போன்ற பொது போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
இங்கு ஹைபர் மார்க்கெட், உணவு கோர்ட், மல்டிப்ளக்ஸ், குடும்பத்துக்கான பொழுதுபோக்கு மையங்கள் உள்ளன. ஸ்பர் ஹைபர் மார்க்கெட் 30000 சதுரடியில் இடம் பெற்றுள்ளது. இதன் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் ராஜிவ் கிருஷ்ணன் கூறுகையில், ‘‘ கோவையில் ஹைபர் மார்க்கெட் வெற்றியை தொடர்ந்து, புரோசோன் மாலிலும் இதை துவக்கியுள்ளோம். வாடிக்கையாளர்களை மையமாக வைத்து, புதுமையான பொருட்கள் இங்கு அறிமுகமாகின்றன. தொடர்ந்து ஆதரவளித்து வரும் கோயம்புத்துார் வாடிக்கையாளர்களுக்கு நன்றி,’’ என்றார்.
2100 இருக்கைகளுடன் 9 தியேட்டர்
கோவையில் 2100 இருக்கைகளுடன் 9 திரைகள் கொண்ட ஐனாக்ஸ் சினிபிளக்ஸ், பொழுதுபோக்கு அம்சங்களாக இடம் பெற்றுள்ளன. தமிழ், இந்தி மற்றும் சர்வதேச சினிமாக்கள் இங்கு திரையிடப்படும். இதன் தலைமை செயல் அலுவலர் அலோக் டண்டன் கூறுகையில், ‘‘கோவையில் எங்களது மல்டிப்ளக்ஸ் தியேட்டரை அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.
இது, தமிழ்நாட்டில் 4வது ஆகும். கலைநயமிக்க, இந்த கோவை தியேட்டரில் 9 திரைகள் உள்ளன. இத்தகைய தியேட்டர் அவுரங்கா பாத்தில் மட்டுமே உள்ளது. தொடர்ந்து இந்த நிறுவனத்துடன் உறவுகள் தொடரும்’’, என்றார்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
20 ஆயிரம் சதுரடிக்கும் மேல் இந்த பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், விளையாட்டு, பூல் டேபிள், பம்பர் கார் போன்ற குழந்தைகளுக்கான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த மையத்தின் நிர்வாக இயக்குனர் ராஜூ ஜெயின் கூறுகையில், ‘‘பொழுதுபோக்கு அம்சங்களை, கோவையில் அறிமுகப்படுத்துவதில் பரவசமடைகிறோம், சர்வதேச தரத்தில் இவை இங்கு அமைக்கப்பட்டுள்ளன,’’ என்றார்.
இவை தவிர, புட்எச்டி, அன்னபூர்ணா, மெக்டொனால்டு, கேஎப்சி, பிஸ்சா ஹட், டோமினோஸ், மர்ஹபா, கபே பாலிவுட், எஸ்எம்எஸ், ஹரிபவன், புஜ்ஜியன் எக்ஸ்பிரஸ், நாகாஸ், ஹாட்டி ஸ்மோக்கி, கப்பா கடா சீசான்ஸ் உள்ளிட்ட பல அறுசுவை உணவுக் கூடங்கள் அமைந்துள்ளன.
சர்வதேச பிராண்டுகள்
இந்தியாவின் அருமயைான சில்லறை விற்பனையகங்களாக 100 கடைகள் இடம் பெற்றுள்ளன. பல்வேறு வகையான பிராண்டுகள், உலகப்புகழ் பெற்ற பெயர் பெற்ற நிறுவனங்கள் தங்களது பொருட்களை இடம் பெறச் செய்துள்ளன.
24 மணி நேரமும் பாதுகாப்பு, கண்காணிப்பு கேமராக்கள் நிர்வகிக்கப்படுகின்றன. பயிற்சி பெற்ற காவலர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆபத்து ஏற்படும் போது எளிதாக வெளியேற வழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. முதலுதவி மையங்களும் உள்ளன. மாற்று திறனாளிகளுக்கும், முதியோருக்கும் பல இடங்களில் ஓய்வு இருக்கை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. வசதியான, சொகுசான ஷாப்பிங் அனுபவத்தை அனைவரும் பெற வசதிகள் செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக